கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : ஜிஎஸ்டி அலுவலகம்
பணியிடம் : கோவை
பணியின் பெயர் : கேண்டீன் உதவியாளர்
காலியிடங்கள் : 3
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு :
18 வயது நிரம்பியவர்களும், 25 வயதுக்கு உட்பட்டவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிப்பது எப்படி..?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Additional Commissioner of GST & Central Excise (P&V),
O/o the Principal Commissioner of GST & Central Excise”,
Coimbatore GST Commissionerate,
No. 6/7, A.T.D. Street, Race Course, Coimbatore – 641018
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.03.2025
மேலும் விவரங்களுக்கு : https://gstchennai.gov.in/images/pdf/tenders/Recruitment_Canteen%20Staff_Coimbatore.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH