fbpx

”மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான்”..!! பிரபல பத்திரிகையின் கணிப்பு..!!

இந்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தலைவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிரபல பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

அந்த கட்டுரையில், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பாஜகவை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விட்டது. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான். இது தவிர்க்க முடியாதது. மனோதிடம் மிக்க அரசியல் தலைவராக தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ள மோடி, இந்துக்கள் அதிகமுள்ள நாட்டில், இந்துத்துவா சித்தாந்தத்தினால் மிக பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.

மாநிலங்கள் அளவிலும், மத்திய அளவிலும் மோடிக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. காங்கிரஸ், நாடு முழுவதிலுமே 3 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், உட்கட்சி குழப்பங்கள் அக்கட்சியில் அதிகம் காணப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான “இன்டியா கூட்டணி” கட்சிகளிடம் முக்கிய விஷயங்களில் ஒற்றுமை இல்லை. மோடியின் வெற்றி உறுதி. ஆனால், வெற்றியின் அளவை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை வரும் காலம் தெரிவிக்கும். 2019ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை மீண்டும் பெறுமா என்பதை தற்போது கூற இயலவில்லை” என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Tue Jan 2 , 2024
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Head – Gold Loan பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு […]

You May Like