fbpx

நான் ஏன் உ.பி., முதல்வர் யோகியின் காலில் விழுந்தேன்…? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்…!

சன்யாசிகள் என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம் எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் லக்னோவில் உள்ள பாஜக தலைவரின் இல்லத்திற்கு சென்ற உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகியின் பாதங்களை தொட்டு வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று இரவு சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ‌. அப்போது உ.பி., முதல்வரின் பாதங்களைத் தொட்டது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

கேள்விக்கு பதில் அளித்த அவர், மரியாதை நிமித்தமாக தான் அந்த செயலை செய்ததாக கூறினார். யோகிகள் அல்லது சன்யாசிகள் என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம். அதைத்தான் நான் செய்துள்ளேன்.

உத்திரபிரதேசத்திற்கு விஜயம் செய்த ரஜினிகாந்த், உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொண்ட தனது படத்தின் சிறப்பு காட்சியையும் ஏற்பாடு செய்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சூர்யா கட்டளைக்கு சென்று குடும்பத்தினருடன் உரையாடினார். தேசத்திற்கான இந்திய ராணுவத்தின் சேவைக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

Vignesh

Next Post

ரூ.2000 நோட்டுகள் வாபஸ்!… மீண்டும் முக்கிய தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

Tue Aug 22 , 2023
ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய பொதுமக்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் தொழிலதிபர்கள் தான் அதிகளவில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மே 19ம் தேதி ரூ. 2000 மதிப்புள்ள நோட்டுக்கள் மீண்டும் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியின் மூலமாகவே ரூ. 2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும் […]

You May Like