பண்ணைபுரத்தைச் சேர்ந்த இளையராஜா அன்னக்கிளி படம் துவங்கி சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் வரை இசையால் ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 1400க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தற்போது இவரது இசையில் நினைவெல்லாம் நீயடா, ஆர்யூ ஓகே பேபி, விடுதலை 2, கிஃப்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகவிருக்கிறதாம். இதற்கான கதையை இளையராஜாவே எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் இளையராஜாவின் தீவிரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தை பால்கே இயக்கவிருக்கிறார். பால்கே இயக்கிய பெரும்பாலான ஹிந்தி படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.