சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில், நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘புஷ்பா’ முதல் பாகத்தில் ‘ஊ சொல்றியா மாமா’பாடலுக்கு சமந்தா ஆடியிருந்தார். இந்தப் பாடல் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. அதனால் இதே போன்ற ஒரு பாடலுக்கு இந்தி நடிகைகளிடம் பேசி வந்ததாகக் கூறப்பட்டது. இப்போது ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.