நடிகர் கவினின் பிளடி பெக்கர் படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “உழைக்காமல் காசு சம்பாதிக்க ஆசைப்படும் ஹீரோ ஜாலியாக பிச்சை எடுத்து பிழைக்கிறார். இவருக்கு சிறு வயது முதலே ஒரு ஆசை உள்ளது. இவர் பார்த்து வைத்திருக்கும் மாளிகை ஒன்றில் ஒரு நாள் தங்கியிருக்க வேண்டும் என்பதே அந்த ஆசை. அப்படி ஒரு நாள் நடக்க அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
ஒரு நல்ல கதை அல்லது நல்ல இயக்குனர் எனில் படத்தின் மைய கதாபாத்திரம் என்ன நினைக்கிறதோ அதை படம் பார்ப்பவர்களும் நினைக்க வேண்டும். ஹீரோ அழுதால் நமக்கு அழுகை வர வேண்டும். ஹீரோ சிரித்தால் நமக்கு சிரிப்பு வர வேண்டும். இந்த படத்தின் ஹீரோ அந்த பங்களாவில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என ஆசைப்படுவான். நமக்கும் அதே எண்ணம்தான்.
அதாவது, படத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார். ‘முடிஞ்சா சிரிச்சி பாருங்கடா’ என சவால் விட்டு இப்படத்தை இயக்கி இயக்கியுள்ளனர். ஒரு சீனிலும் சிரிப்பு வரவில்லை. இது காமெடி படமா?. சீரியஸ் படமா?.. கிரைம் திரில்லர் படமா?. ஹாரர் படமா என யோசித்து பைத்தியம் பிடித்துவிட்டது. பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி ஒரு படத்தை எடுத்து வெச்சிருக்காங்க.
அதனால்தான் பிளடி பெக்கர் என தலைப்பு வைத்து அதை குறியீடாக வைத்திருக்கின்றனர். மறுபடியும் இயக்குனர் ஜெயிச்சிட்டாரு. தீபாவளிக்கு ஜாலியாக இருக்கும் என இப்படத்திற்கு போனால் மொக்கை மொக்கையாக காமெடி செய்து காட்டு மொக்கையாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளனர். இந்த படத்தை எடுத்தவங்க சரியான பைத்தியம் போல. படம் முடியும் போதுதான் இவர்கள் சரியாகாத பைத்தியம் என்பது நமக்கு புரிகிறது. பிளடி பெக்கர்ஸ்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Read More : மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலா..? இனி கூண்டோடு சஸ்பெண்ட்..!! தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை..!!