fbpx

கரூரில் ஐடி ரெய்டு…..! அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுப்பான உதயநிதி ஸ்டாலின் காரணம் என்ன…..?

தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதோடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களும் வருமானவரித்துறையினரின் சோதனைக்கு தப்பவில்லை. சுமார் 100 பகுதிகளுக்கு மேல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது.

கரூர் ராமகிருஷ்ணாபுறத்தில் செந்தில் பாலாஜி என் சகோதரர் வீட்டில் சோதனை நடைபெற்றபோது அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களுடைய காரை அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆகவே நிலைமை கைமீறிப் போன நிலையில், உள்துறை செயலாளரான அமுதா ஐஏஎஸ் முதலமைச்சர் ஸ்டாலின் ஊரில் இல்லாததால் அவருடைய மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு உரையாற்றினார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போன் போட்டு பேசியுள்ளார். அதாவது உங்களுடைய ஆதரவாளர்களை சற்று அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் சத்தமுள்ள சீர்குலைந்து போகிறது என்று அவரை கடிந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் செந்தில் பாலாஜி தன்னுடைய ஆதரவாளர்களிடம் அமைதியாக இருக்குமாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்து விடாமல் செய்த கலாட்டாவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Post

மத்திய கல்வி நிறுவனங்களில் இது இனிவரும் காலங்களில் கட்டாயம்…..! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு……!

Sat May 27 , 2023
தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் தமிழகத்தின் தாய் மொழியாம் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் அடிக்கடி எழுந்த நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் வருடம் அமலுக்கு வந்த நிலையிலும், 8ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்படும் என்றும், நடப்பு கல்வி ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று […]

You May Like