சென்னையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நந்தனத்தில் உள்ள நிறுவனத்தின் கட்டடத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.
இதற்கிடையே, கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக அம்மன் அர்ஜுனன் சொத்து சேர்த்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தற்போது அவரது வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.