நடைபெறவிருக்கும் மார்ச்/ஏப்ரல் 2023,இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 1-ம் தேதி வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்க சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 05 முதல் 07-ம் தேதி வரையிலான நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணத்தினை செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் 1-ம் தேதி வரையிலான நாட்களில் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
சேவை மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுக் கட்டணத் தொகையினை ஆன்லைனில் செலுத்திய பிறகு பெறப்படும் இரசீது ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் இன்று மாலைக்குள் ஒப்படைக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.