நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்குவதற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்று விஜயதரணி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கொடிப் பாடலை பனையூர் அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த விஜயதரணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் முதன்மை கொறடா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தேன். அப்போது, மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அந்த தேர்தலில் நான் போட்டியிடுவதாக பேசப்பட்டது. பின்பு, முதல் வேட்பாளர் பட்டியல் வந்தபோது என் பெயர் இருந்தது.
ஆனால், எனக்கு பதிலாக மூத்த தலைவர் ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக பிடிவாதமாக இருந்தார். அதனால், அவருக்காக நான் பணியாற்றினேன். ஆனால், கடந்த தேர்தலை விட 60,000 வாக்குகள் குறைவாகவே வந்தது. நடிகர் விஜய் ராகுல் காந்தியை சந்தித்த போது காங்கிரசில் ஒரு பதவி மட்டும் கேட்டார். அதற்கு ராகுல், நீங்கள் ஒரு பெரிய நட்சத்திரம். நீங்கள் ஒரு கட்சியையே தொடங்கி பணியாற்றலாம் என்றார். அதனால் தான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
Read More : குடிபோதையில் படுத்திருந்த கூலித்தொழிலாளி..!! நடிகை ரேகா நாயரின் கார் மோதி பலி..!!