fbpx

3 நாட்களுக்கு கனமழை பெய்யும்.. இந்த மாவட்டங்களில் மட்டும் தான்..

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.. நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, கடலூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 19-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌
55 கி.மீ வேகத்துலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. வரும் 18-ம் தேதி, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள் இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

பூமியில் இருந்து கம்பீரமாக 30 கி.மீ. உயரத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி..!

Mon Aug 15 , 2022
நாடு முழுவதும் இந்தியா 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் தேச பக்தியுடன் ஏற்றி வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு, சமீபத்தில் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி பூமியின் குறைந்த தூர வட்டபாதையில் நிலைநிறுத்தியது. […]

You May Like