fbpx

வரும் 7-ம் தேதி வரை கனமழை பெய்யும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க…

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின்‌ மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பறிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்றும் நாளையும் குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக- ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப்‌பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Maha

Next Post

இன்று வெளியாகும் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்துகொள்வது..?

Mon Jul 4 , 2022
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் […]
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகின..! எத்தனை மாணவர்கள் தேர்ச்சி..?

You May Like