fbpx

இன்னும் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, தாத்துக்குடி, சிவகங்கை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அது கனமழையும்‌, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, திருச்சி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, திருப்பத்தார்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 4-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, மற்றும்‌ கோவை, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, கரூர்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிகனமழையும்‌, கன்னியாகுமரி, திஇருநெல்வேலி, திருச்சி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 5-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரு 6-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

’அமலாக்கத்துறையின் விசாரணையில் சிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி’..! அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Tue Aug 2 , 2022
தமிழகத்தில் எப்படியெல்லாம் ஜிஎஸ்டி விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் நிர்மலா சீதாராமன் நிரூபித்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அனைத்து கட்சியினரும் கட்சி பேதமின்றி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற கொடிகள் வழங்க வேண்டும். பாஜக சார்பில் 50 லட்சம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளோம். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். […]
’சாராய வியாபாரிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’..!! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை..!!

You May Like