fbpx

18 வருஷம் ஆச்சு..!! சொத்தில் பங்கு கேட்ட மனைவியை ஓட ஓட வெட்டிய கணவன்..!! பீதியில் பொதுமக்கள்..!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுா தாலுகா திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே, சீனிவாஸ், மனைவி சவிதாவிடம் விவாகரத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், குடும்ப சொத்து விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.

அந்தவகையில், நேற்றும் சவிதாவின் வீட்டிற்கு சென்ற சீனிவாஸ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சீனிவாஸ் கையில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் இருந்து தப்பி செல்வதற்காக சவிதா ஓடினார். ஆனால், சீனிவாஸ் சவிதாவை துரத்தி சென்று தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சவிதா நடுரோட்டில் சுருண்டு விழுந்தார். இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து சீனிவாசை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த ஆயுதத்தையும் பறித்தனர்.

பின்னர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சவிதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சீனிவாசை கைது செய்தனர். இதற்கிடையில், இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சவிதாவை நேரில் சந்தித்து விசாரித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சொத்து தகராறில் சீனிவாஸ் இரும்பு கம்பி, மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக சீனிவாசை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

Chella

Next Post

உச்சத்தில் தக்காளி விலை..!! பச்சை மிளகாயுமா..? தவிக்கும் பொதுமக்கள்..!! இன்றைய நிலவரம் இதோ..!!

Tue Jun 27 , 2023
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. உதாரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு வெளி மாநிலங்களில் இருந்து 1,200 டன் தக்காளி வரவேண்டும். ஆனால், வெறும் […]

You May Like