fbpx

திருமணம் முடிந்து 2 மணிநேரம் தான் ஆச்சு..!! அதுக்குள்ள விவாகரத்தா..? கோபத்துடன் வெளியேறிய மணமகன்..!! நடந்தது என்ன..?

திருமணம் முடிந்த 2 மணிநேரத்திலேயே மணப்பெண்ணுக்கு மணமகன் விவகாரத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில், இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்திலேயே மணமகன் மணப்பெண்ணுக்கு விவாகரத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக மணப்பெண்ணின் சகோதரர் கம்ரான் வாசி கூறுகையில், ”தனது இரு சகோதரிகளான டோலி மற்றும் கௌரி உள்ளிட்டோருக்கு ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு டோலியின் மணமகன் முகமது ஆசிப், வரதட்சணையாக கார் வழங்காததால், அதிருப்தி அடைந்து இப்போதே கார் வாங்கித் தர வேண்டும் அல்லது அதற்கு பதிலாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு தாங்கள் இவ்வளவு சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று சொன்னதால், மண்டபத்திலேயே விவாகரத்துக் கூறிவிட்டு உடனடியாக தனது குடும்பத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் சகோதரர் கம்ரன் வாசி, இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஆசிப் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த 2 மணிநேரத்திலேயே மணப்பெண்ணுக்கு மணமகன் விவகாரத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

உரிய காலத்தில் சம்பளம் கிடைக்கவில்லை..!! கூலி வேலைக்கு செல்ல விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய அரசுப் பேருந்து ஓட்டுநர்..!!

Sat Jul 15 , 2023
உரிய காலத்தில் சம்பளம் கிடைக்காததால், குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற, கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த அரசு பஸ் டிரைவர், அதற்காக விடுமுறை கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த மாதத்துக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய காலத்தில் […]

You May Like