fbpx

’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

ஓபிஎஸ் வேண்டுமென்றால் சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சியாக செயல்படலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனமான எம்ஜிஆர் திரை உலகிலும், அரசியலிலும் ஜாம்பவானாக திகழ்ந்தார். திமுகவை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். குடும்ப ஆட்சியை எதிர்த்தவர். எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க இருப்பதாக கூறிய கருத்து தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சசிகலா தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் டிடிவி தினகரன், சசிகலாவும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து ஒரே அணியாக செயல்படலாம். அதே நேரத்தில் எங்கள் கட்சி விவகாரங்களில் அவர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.

’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

ஓபிஎஸ் வேண்டுமென்றால் சசிகலாவுடன் இணைந்து கொண்டு தனிக்கட்சியாக செயல்படலாம். இதன் மூலம் அவர்களுக்குள் வேண்டுமென்றால் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அதிமுகவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. திமுகவை பொறுத்தவரை கட்சியை குடும்ப கட்சியாகிவிட்டது கழகமே குடும்பம் என்பது போய் குடும்பமே கழகமாகிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு முறையான அழைப்புகள் வரவில்லை. இல்லாத ஒரு பதவிக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்” என்றார்.

Chella

Next Post

வயலில் மலர்ந்த கள்ளக்காதல்….! 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 27 வயதுப்பெண்….!

Tue Jan 17 , 2023
காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதல் நினைத்தால் எதையும் செய்து விட முடியும். அப்படிப்பட்ட காதலை ஒரு சிலர் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள். முறை தவறிய உறவில் இருக்கும் பலர் அவர்கள் இருக்கும் உறவுக்கு வாய்க்கும் பெயர் காதல் அப்படி முறை தவறிய உறவில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்பட்டால் பரவாயில்லை. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இப்படிப்பட்டவர்களால் பிரச்சனை ஏற்பட்டால்….? ஓசூர் அருகே உள்ள பெரிய […]

You May Like