fbpx

’எனக்கு படிக்க கஷ்டமா இருக்கு’..!! ஹாஸ்டல் அறையில் தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி..!! சிக்கியது கடிதம்..!!

திருச்செந்தூர் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏரல் வட்டம் சக்கம்மாள்புரத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகள் செல்வராணி (19). இவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரி சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வராணி அறையில் இருந்த மற்றொரு மாணவி ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் செல்வராணி, தனது தோழியின் அறைக்கு சென்று தூங்கி இருக்கிறார். நேற்று காலை 7 மணிக்கு எழுந்து அவரது அறைக்கு வந்தார். 8.30 மணியளவில் மாணவிகள் செல்வராணியை சாப்பிட அழைக்க அவரது அறைக்கு வந்துள்ளனர். அங்கு அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அறைக்குள் அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைக்கண்ட சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

’எனக்கு படிக்க கஷ்டமா இருக்கு’..!! ஹாஸ்டல் அறையில் தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி..!! சிக்கியது கடிதம்..!!

இதுகுறித்து தகவல் அறிந்து திருச்செந்தூர் ஆர்டிஒ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஏ.டி.எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், லயோலோ இக்னிஷீயஸ், டி.எஸ்.பி. ஆவுடையப்பன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் அறையில் துண்டு சீட்டு இருந்தது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. ’எனக்கு படிக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என மாணவி செல்வராணி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வகுப்பறையில் அட்டகாசம்..! தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை..!! சுருண்டு விழுந்த மாணவன்..! பலியான சோகம்..!

இந்நிலையில், மாணவி செல்வராணி இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் கல்லூரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பிரேத பரிசோதனை அறிக்கை பெற்ற பின்னர் முறையாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவியின் உடலை வாங்கிக் கொள்ளவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சபரிமலை ஐயப்பன் தரிசனம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

Sun Nov 13 , 2022
கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், சபரிமலை சிறப்பு ஆணையர் அவர்களின் மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்த […]
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! பிற்பகலுக்குப் பிறகு மலையேற அனுமதியில்லை..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

You May Like