நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க சென்ற நரிக்குறவ மக்களுக்கு ரோகினி தியேட்டரில் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள், “பத்து தல படத்தை பார்க்க ஆசையாக வந்தோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விஜய், அஜித் படத்திற்கும் இது போன்று தான் எங்களுக்கு நடந்தது. அவுங்களுக்கு எங்களை பார்த்தால் பிடிக்கவில்லை போல” என்று உருக்கமாக நரிக்குறவர் மக்கள் பேசியுள்ளனர்.