fbpx

நைட் இருக்கு..!! விடிஞ்சு பார்த்தா இல்ல..!! பிணவறையில் நடக்கும் மர்மங்கள்..!! பீதியில் மக்கள்..!! திகில் சம்பவம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், கடந்த ஜனவரி 4ஆம் தேதி அமென்ட் என்ற கிராமத்தை சேர்ந்த மோதிலால் கவுண்ட் (32) என்பவர் அனுமதிக்கப்பட்டார். தான் வேலைபார்த்து வந்த இடத்தில் மயங்கி விழுந்ததால், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோதிலால் கவுண்ட் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக குளிர்ந்த பெட்டியில் வைக்கப்பட இருந்தது. ஆனால், அப்போது அது வேலை செய்யாததால், அவரது உடல் பிணவறையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய வந்த மருத்துவர், அவரை பார்த்தபோது, அவரது ஒரு கண் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

நைட் இருக்கு..!! விடிஞ்சு பார்த்தா இல்ல..!! பிணவறையில் நடக்கும் மர்மங்கள்..!! பீதியில் மக்கள்..!! திகில் சம்பவம்..!!

இது பெரும் சர்ச்சையான நிலையில், திறந்த வெளியில் கிடந்ததால் எலி தின்றிருக்கும் என்று மருத்துவர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களே இருக்கும் நிலையில், அதே ஜனவரி மாதத்தில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதாவது ரமேஷ் அகிவார் என்ற 25 வயது இளைஞர், விபத்தில் சிக்கி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விடிந்த மறுநாளே உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக குளிர்ந்த பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தது. மறுநாள் வழக்கபோல் மருத்துவர் பார்த்தபோது, அவரது ஒற்றை கண்ணும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் இந்த அதிர்ச்சி நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறுகையில், பிணவறையில் ஃப்ரீசரில்தான் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டது. இருப்பினும் கண்கள் எவ்வாறு காணாமல் போனது என்று தெரியவில்லை. காவல்துறை முதற்கட்ட விசாரணையில் எலிகள் கடித்திருக்கலாம் என என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரங்கேறிய இந்த சம்பவத்திற்கு இன்னும் முழுமையான விடை தெரியவில்லை. இந்த நிகழ்வால் அந்த பகுதி மக்கள் பெரும் பதற்றத்திலும் பீதியிலும் உள்ளனர். இது ஏதாவது சைக்கோ வேலையாக இருக்குமோ என்றும் அஞ்சுகின்றனர்.

Chella

Next Post

முடிந்தது சிகிச்சை உடனே வலைதளத்தில் பதிவிட்ட விஜய்ஆண்டனி….! என்ன சொல்லியிருக்கார்….?

Thu Feb 2 , 2023
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தான். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்பட த்தின் 2வது பாகம் எப்போது வரும் என்று பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகம் வந்த சமயத்திலேயே ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். அதோடு, நடிகர், இசையமைப்பாளர் என்ற அடையாளத்தை கடந்து இந்த திரைப்படத்தின் மூலமாக விஜய் ஆண்டனி […]

You May Like