ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி உங்களிடம் இருந்து பண மோசடி செய்ய அதிக வாய்ப்புள்ளது.
பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி கூப்பன், கிஃப்ட்கள் பரப்பி, சிலர் பண மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு, வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற மெசேஜ்கள் ஏதேனும் வந்தால், மக்கள் அதை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.