fbpx

’அது மட்டும் என்கூட’..!! ’கல்யாணம் வேற ஒருத்தி கூடவா’..? கள்ளக்காதலியை தீவைத்துக் கொன்ற இளைஞர்..!!

திருமணத்திற்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா (30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) என்பவருடன் பிரேமாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதனையறிந்த பிரேமா, விஜய்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், என்னை நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ, போட்டோஸ் என்னிடம் இருக்கிறது. இதை சமூகவலைதளத்தில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த விஜய், பிரேமாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும், பிரேமாவை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அவரின் அலறம் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பிரேமாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Chella

Next Post

”கண்ட இடத்துல கை வைக்காதீங்க சார்”..!! பள்ளி மாணவிகளை தடவி பேசிய தாளாளர்..!! பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

Wed Mar 1 , 2023
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக குதுப்புன் நஜிப் (47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளை அடிக்கடி தொட்டு பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளித்தும் பள்ளி […]

You May Like