எடப்பாடி பழனிசாமி விரைவில் திகார் ஜெயிலுக்கு செல்வார் என்று நான் பேசியது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது பரம ரகசியம். இருந்தாலும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் அதை சொல்வேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய போது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளராகும் வகையில் சட்ட விதிகள் வகுத்தார். ஆனால், அதனை தகர்த்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து பழனிசாமி பொதுச்செயலாளராகி கட்சியை கபலிகரம் செய்ய முயற்சிக்கிறார். இதனை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் அதிமுக மீட்பு குழு கூட்டத்தை நடத்துகிறோம். அ
திமுக ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். எடப்பாடி பழனிசாமி விரைவில் திகார் சிறைக்குச் செல்வார் என பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அந்த ரகசியத்தை சரியான நேரத்தில் சொல்வேன்” என்று தெரிவித்தார்.