fbpx

கே.எல்.ராகுலின் நிலையை நானும் சந்தித்திருக்கிறேன்!… கழிவறையில் அழுதிருக்கின்றேன்!… தினேஷ் கார்த்திக் உருக்கமான பேச்சு!

மோசமான பேட்டிங் காரணமாக கே.எல்.ராகுல் சந்திக்கும் கடுமையான விமர்சனங்களை தானும் சந்தித்ததாக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார்.

காயம் மற்றும் அறுவை சிகிச்சையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளங்கிவரும் கே.எல்.ராகுல், கடந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடவில்லை. மேலும், மோசமான ஆட்டம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும், டி20 துணை கேப்டன் பொறுப்பையும் இழந்த கே.எல்.ராகுல், டி20 அணியில் வீரர்கள் பட்டியலிலும் நீக்கப்பட்டார். இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக், தான் சந்தித்த மோசமான காலகட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், கே.எல்.ராகுலுக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுல் ஒரு திறமையான வீரர் என்றும் அவருக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்றும் கூறினார். கே.எல்.ராகுலுக்கு தற்போது சிறிய இடைவெளி தேவை என்று குறிப்பிட்ட தினேஷ் கார்த்திக், தானும் இதுபோன்ற நிலையை கடந்துவந்ததாகவும் அது வலிமிகுந்ததாக இருந்தது எனவும் கூறினார்.

மேலும், கே.எல்.ராகுல் ஒரு கிளாஸ் பிளேயர் எனவும் கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மெட்டுகளிலும் மிகவும் திறமையாக விளையாடக்கூடியவர் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். மேலும், அவரது இந்த நிலை குறித்து வெளியில் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் காதுகளுக்கும் இடையே நடப்பதுதான். ஒருநாள் தொடருக்கு புதிதாக திரும்பி வாருங்கள் என்று கிரிக்பஸ்-க்கு அளித்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

போட்டி உலகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வெளியில் வரவேண்டும் என்று ஊக்கமளித்து பேசிய தினேஷ் கார்த்திக், ஒரு வீரராக நான் எப்படி இந்த தருணத்தில் உணர்ந்தேன் என்றால், அது மோசமான ஒன்றாக இருந்தது என்றும் என்னுடைய மோசமான காலத்தில் கழிவறைக்குள் நுழைந்து கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றேன் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

Kokila

Next Post

ஒரே மாதிரி 60+ குழந்தைகள்!... ஃபேஸ்புக்கில் போலி பெயரில் விந்தணு தானம்!... ஆஸ்திரேலியாவின் தாராள பிரபு!

Wed Feb 22 , 2023
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி, ஃபேஸ்புக்கில் போலி பெயர்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட தன்பான் பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்துவரும் நவீன காலத்திற்கேற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. மேலும் தற்போதைய தம்பதிகள் பலரிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. மேலும் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனும் இல்லாமல் […]

You May Like