இந்தாண்டு இறுதிக்குள் மாதம் 50,000 பேருக்கு என்ற அளவில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (03.04.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், “வருவாய்த்துறை என்பது பொதுமக்களுடன் பின்னிப் பிணைந்து உள்ளது. முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சமூக நலத்திட்டங்களும், பட்டா, சாதி சான்று என அனைத்து வகையான சான்றிதழ்களும் வருவாய்த்துறை மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்தாண்டு இறுதிக்குள் மாதம் 50,000 பேருக்கு என்ற அளவில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும். மூலமாகவே வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் பேருக்கு என்ற அளவில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும். இதற்கிடையே, முதியோர் ஓய்வூதியம் கடந்த ஆண்டு ஜூலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், “மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களையும், முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வந்ததால், பணம் வழங்கப்படவில்லை. தற்போது தகுதியான பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக 50,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
Read More : பயணிகளே..!! செம குட் நியூஸ்..!! இனி இ-சேவை மையம் மூலம் அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!!