பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாகவே மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விவசாயிகள் விடுத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருகிறதாம். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
அதாவது, இந்தாண்டு முதல் கூடுதலாக ரூ.3,000 சேர்த்து ஆண்டுக்கு ரூ.9,000 வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் மத்திய பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.