fbpx

ஜாக்பாட் அறிவிப்பு..!! பழைய ஓய்வூதிய திட்டம்..!! மத்திய அரசு ஊழியர்கள் செம குஷி..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தேசிய ஓய்வூதிய திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பிறகு அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.. 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனியார் துறை ஊழியர்களும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.

இந்நிலையில், கடந்த 2003-க்கு முன்பு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2003 டிசம்பர் 22ஆம் தேதிக்கு முன்பு அகில இந்திய பணியாளராக பணி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளும் படியான விருப்பத்தை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில், AIS (அகில இந்திய சேவை) (DCRB) விதிகள், 1958ன்படி, டிசம்பர் 22, 2003 அன்று தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்.பி.எஸ்.) அமல்படுத்துவதற்கான அறிவிப்புக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட காலிப் பணியில் சேர்ந்த ஏஐஎஸ் அதிகாரிகள், ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வருபவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) விதிகளின் கீழ் காப்பீடு பெற ஒருமுறை விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வு 2003, சிவில் சர்வீஸ் தேர்வு 2004 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு 2003 ஆகிய அறிவிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஐஎஸ் அதிகாரிகள் இந்த விதிகளின் கீழ் வருவதற்கு தகுதியுடையவர்கள். ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற பல்வேறு நீதிமன்றங்கள் அனுமதித்த நிலையில், AIS (DCRB) விதிகளின் 1958 இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்தியப் பணியாளர்கள் அந்த பணியில் சேர்வதற்கு முன்னர், CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 (இப்போது 2021) அல்லது வேறு ஏதேனும் விதிகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட மத்திய அரசுப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்களும் மார்ச் 3, 2003 தேதியிட்ட d/o P&PW O.M இன் விதிகளின் கீழ் தகுதியுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, AIS (DCRB) விதிகள், 1958 இன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான ஒரு முறை விருப்பத்தைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல்களின்படி, அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் விருப்பத்தேர்வு, அவர் எந்த மாநில கேடரில் உள்ளாரோ அந்த மாநில அரசிடம் சமர்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தேவைப்பட்டால், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையிடமும் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்திடமும் அல்லது இந்திய வன சேவை உறுப்பினர்கள் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையிடமும் கேட்டு தெளிவு பெறலாம். இந்த அறிவுறுத்தல்களின்படி, நவம்பர் 30, 2023-க்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஒரு முறை விருப்பத்தைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தத் தகுதியுடைய அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மட்டுமே வருவார்கள்.

தகுதியான ஊழியர்களுக்கு ஜனவரி 31, 2024-க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்படும். அதன்பிறகு அவர்களின் என்பிஎஸ் கணக்குகள் மார்ச் 31, 2024க்குள் மூடப்பட்டு விடும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Chella

Next Post

’என் பொண்ணுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரல’ வேதனையில் புலம்பிய தாய்..!! தனது பதிலால் அரங்கத்தையே சிரிக்க வைத்த கோபிநாத்..!!

Fri Jul 14 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். குறிப்பாக ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்சியானது 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத், சிறப்பாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்றன.  இந்நிலையில், இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் […]
’என் பொண்ணுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரல’ வேதனையில் புலம்பிய தாய்..!! தனது பதிலால் அரங்கத்தையே சிரிக்க வைத்த கோபிநாத்..!!

You May Like