fbpx

“ உண்மையை பேசி ரியல் ஹீரோவுக்கு ஜெயில்…” சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு குவியும் ஆதரவு..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கருக்கு ஆதரவாக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் யூ டியூப் வீடியோக்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் பிரபலமானவர்.. சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் நீதித்துறையை விமர்சித்திருந்தார்.. அதாவது ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.. மேலும், சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைதண்டனை அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது.. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் அவர் நேற்றே சிறையில் அடைக்கப்பட்டார்.. சிறையில் இருந்து கொண்டே அவர் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது..

இதையடுத்து ட்விட்டரில் IstandWithSavukkuShankar என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.. ஊழலுக்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கேள்வி கேட்கும் ஒரே மனிதர் என்றும், அவர் தான் ரியல் ஹீரோ எனவும் பதிவிட்டு வருகின்றனர்..

மேலும் உண்மையை பேசியதற்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது எனவும், சிங்கம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.. தனது நேர்மைக்கும், துணிச்சலுக்கும் அவர் கொடுத்த மிகப்பெரிய விலை இது என்றும் பதிவிட்டுள்ளனர்.. அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், குரல் எழுப்பியவரையே கைது செய்வீர்களா என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்..

https://twitter.com/nakedconviction/status/1570365309646942208

Maha

Next Post

மின்சார துறையில் வேலைவாய்ப்பு…! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Fri Sep 16 , 2022
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

You May Like