கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அலங்காநல்லூர் மெரினா கடற்கரை உடைத்த பல இடங்களில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. இதன் பிறகு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரவும் போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வரும் நிலையில் போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது எப்படி என்ற விவரங்கள் குறித்தும் தமிழக அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டியின்போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும் எனவும், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்கும் வீரர்கள் அவரவரின் இடங்களில் தான் நிற்க வேண்டும் என்றும் காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் தேவைப்பட்டால் நீதிபதிகளின் கேள்விகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். மாடுபிடி வீரர்கள், உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காளைகளை கால்நடை மருத்துவர் பரிசோதிப்பார். குறைந்தது 18 மாதம் வயதுள்ள காளைகளே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
காளைகளுக்கு மது , கண்களில் மிளகாய் பொடி தூவுதல் உள்ளிட்ட விரோத செயல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 50 சதுரமீட்டர் கொண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவிழ்த்து விடப்படும். ஒரே நேரத்தில் 25 வீரர்கள் மட்டுமே அரங்கின் உள் காளையை அடக்க அனுமதிக்கப்படுவர்.
காளையின் திமிலை அதனை அடக்க ஒருவர் மட்டுமே பிடிப்பர், அதிகபட்சமாக 30 வினாடிகள் மட்டுமே திமிலை பிடித்து தொங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்டோர் காளையை அடக்க முற்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் நீள ஜல்லிக்கட்டு அரங்கை தாண்டினால் காளையை பிடித்து செல்ல நீண்ட பாதை உள்ளது, அந்த பகுதியில் வைத்து காளையின் உரிமையாளர் அதனை பிடித்து செல்வார், ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுமையாக கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.