fbpx

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு..!! சீறிப்பாயும் காளையும்..!! காண குவிந்த மக்கள்..!!

இலங்கை நாட்டில் முதல்முறையாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் நடக்கும். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகெங்கும் புகழ்பெற்றவை. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கப் பார்வையாளர்கள் குவிவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள தச்சங்குறிச்சி என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கிடையே முதல்முறையாக இலங்கையிலும் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த போதே இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், 100-க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Chella

Next Post

குட் நியூஸ்..!! பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! நாளை முதல் விநியோகம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Jan 6 , 2024
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு […]

You May Like