fbpx

’ஐபிஎல் போல் ஜல்லிக்கட்டு லீக் போட்டி’..!! ’வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை’..!! அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்..!!

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ”ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தன. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி.

ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த பரிசீலித்து வருகிறோம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா.? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.!

Thu Jan 18 , 2024
பொதுவாக குளிர் காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற நோய்கள் சாதாரணமாக பாதிக்கும் என்பதால் பலரும் பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் குளிர்காலத்தில் ஒரு சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய் வரவிடாமல் தடுக்கலாம். குறிப்பாக ஆரஞ்சு பழம் குளிர்காலத்தில் சாப்பிடுவது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றுதான் ஆரஞ்சு […]

You May Like