fbpx

அதிகாலையில் குலுங்கிய ஜம்மு-காஷ்மீர்!… ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு!

ஜம்மு -காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் (செவ்வாய்)அதிகாலை 1:10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளது.

இதேபோல், அதிகாலை 4:33 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Kokila

Next Post

உங்க பேங்க் அக்கவுண்டுக்கு பணம் வரப்போகுது..!! இவர்களுக்கும் கிடைக்கும்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Tue Dec 26 , 2023
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால், கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அரசு சார்பில், தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் […]

You May Like