தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் காண அறிவிப்பு நேற்று வெளியானது.
மேலும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பணம் வருகின்ற பத்தாம் தேதி முதல் தமிழக ரேசன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வருகின்ற 12ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்கள் எந்த வித இடையூறின்றி தங்களது பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பணத்தை வாங்கி செல்வதற்கு வசதியாகவும் இதனை அரசு அறிவித்திருக்கிறது.
மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்தப் பணி நாளை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் விடுப்பு வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த வருடம் கன மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகை வழங்கியதால் பொங்கல் பரிசுத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் மக்களிடத்தில் நிலவியது. எனினும் பொங்கல் பரிசுத் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.