2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 9ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்குகிவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றம் செய்யப்பட்டது, மேலும் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுகாவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக கருதப்படும், குடும்ப தலைவிக்கு மாதம் 1000ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.