fbpx

இருமடங்கு இறப்பை சந்திக்கும் ஜப்பான்!… இதேநிலை தொடர்ந்தால் நாடு அழிந்துவிடும்!… பிரதமர் ஆலோசகர் எச்சரிக்கை!…

பிறப்பைவிட இருமடங்கு அதிக இறப்புகளை சந்தித்து வரும் நிலையில், இந்தநிலையை கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பான் என்ற நாடே மறைந்துவிடும் என்று அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானில் கடந்த 2022 இல் பிறந்தவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி, அதிகமான மக்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது குறித்து ஜப்பான் பிரதமர் ஆலோசகர் மசாகோ மோரி கூறும்போது, நாடு பிறப்பு விகிதத்தில் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்றும் இதனை தடுக்காவிட்டால் ஜப்பான் என்ற நாடே மறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை மீறுவதை தடுக்க எதாவது செய்யாவிட்டால், ஜப்பான் இருக்காது என்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பே எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜப்பானின் மக்கள்தொகை 2008 இல் உச்சத்தை அடைந்தது மற்றும் அதன் பின்னர் 124.6 மில்லியனாக குறைந்துள்ளது, கடந்த 2022 ஆம் ஆண்டில், ஜப்பான் 8,00,000 க்கும் குறைவான பிறப்புகள் மற்றும் சுமார் 15,80,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதே நிலைமை நீடித்தால் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தொழில் மற்றும் பொருளாதார வலிமை வீழ்ச்சியடையும் என்று எச்சரித்திருந்தார். இதனை தடுப்பதற்கு அரசு வேண்டிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மக்கள் தொகையை மேம்படுத்த, குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

இங்கிலாந்தில் இனி அதற்கு இடமில்லை!... பிரதமர் ரிஷி சுனக் அதிரடி!... விவரம் உள்ளே!

Tue Mar 7 , 2023
படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடியாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இங்கிலாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்தால் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய […]

You May Like