ஜப்பானில் பெய்து வரும் கடும் புயலால்அங்கு வரலாறு காணாத அளவிற்கு மழை ஏற்பட்டுள்ளதோடு புயலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த மழைக்கு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ககோஷிமா என்ற நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளில் சரிந்து மூடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையைத் தொடர்ந்து சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் கோடிக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறும்படி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பலத்த காற்று வீசி வருவதால் சில வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. ஆற்றோரத்தில் உள்ள வீடுகளும் ஆற்றில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகளும் வெளியாகி உள்ளது. நிலச்சரிவில்சிக்கிஉள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக நகரமே இருளில் மூழ்கியுள்ளது. கியூஷூ மற்றும் ஜப்பானில் விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தப்பட்டது.
இதனிடையே அற்றின் பாலத்தை கடக்க முயன்ற பேருந்துக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரெங்கும் வெள்ளக்காடாக இருக்கும் இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.