தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அழைப்பிதழ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நீரஜ் 84.52 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பட்டத்தை வென்றார். இது 2025ஆம் ஆண்டில் நீரஜ் சோப்ராவின் முதல் இரட்டை வெற்றியாகும். நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் சாதனை 89.94 மீட்டர் ஆகும். ஆனால், இன்றைய 84.52 மீட்டர் எறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவர் தென்னாப்பிரிக்க போட்டியாளர் டவ் ஸ்மிட்டை விஞ்சினார். மேலும் 80 மீட்டர் தூரத்தை தாண்டிய இரண்டு தடகள வீரர்களில் ஒருவராக இருந்தார். நீரஜ், போட்செஃப்ஸ்ட்ரூமில் புதிய சீசனுக்காக தயாராகி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு, வரவிருக்கும் நிகழ்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்த தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.
தோஹா டயமண்ட் லீக் மே 16ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் நீரஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் மற்றும் விரிவான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீரஜ் சோப்ரா, இப்போது 98.48 மீட்டர் தூரம் ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்த புகழ்பெற்ற நபரான ஜான் எலென்னின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளார். எதிர்கால போட்டிகளுக்கு நீரஜ் தயாராகும் போது அவரது செயல்திறனை மேம்படுத்துவதே இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும்.