‘இனி நாய்களும் பிளைட்டில் போகலாம்..!!’ நாய்களுக்கான பிரத்யேக விமான சேவை வழங்கும் பார்க் ஏர்!! – டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில் நாய்களுக்கு உகந்த விமான சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானங்களில் நாய்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பதால், அமெரிக்காவின் பார்க் விமான நிறுவனம் நாய்கள் பயணிக்க வழிவகை செய்துள்ளது.

நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.

இந்த விமானத்தில் நாய்களுக்காக பிரத்யேக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாய்களை அதன் உரிமையாளர் பயணத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விமான நிலையம் அழைத்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

இதுகுறித்து, பார்க் ஏர் நிறுவனம் கூறுகையில், “முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன,” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பி, ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more ; மாதத்திற்கு வெறும் ரூ.300 மட்டுமே செலவு..!! அசத்தலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Next Post

Ajithkumar | இணையத்தில் படு வைரலாகி வரும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Tue May 28 , 2024
Pictures of Ajith Kumar posing with a smile on the set are going viral on the internet.

You May Like