செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார்.
மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் வசித்த பகுதியில், அருள்வாக்கு சொல்வதில் தொடங்கி பிரபலம் அடைந்தார். ஆதிபராசக்தியின் வெளிப்பாடாகத் தன்னை அவர் அறிவித்துக்கொண்டதால், அவருக்கு பக்தர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவரை ‘அம்மா’ என்று அழைத்தனர்.
எழுத்தாளரும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான இந்துமதி என்பவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; ஜெயலலிதா அரசியலுக்குள் நுழைந்த காலகட்டத்தில், ஒருமுறை மேல்மருவத்தூருக்கு செய்தி சேகரிப்பதற்காக சென்று இருந்தேன். பங்காரு அடிகளாரை சந்தித்து பேசிய போது வெற்றிலையை கிள்ளி போட்டார். அந்த வெற்றிலை திடீரென சுருட்டாக மாறியது.
ஜெயலலிதா அவர்களிடம் நான் இதை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினேன். அதற்கு அவர் காலில் இருந்து எடுத்து இருப்பார், அவரை பூசணிக்காவை எடுக்க சொல்லு நான் நம்புகிறேன் என ஜெயலலிதா தன்னிடம் தொலைபேசி மூலம் நகைச்சுவையுடன் கூறினார். பின்னர் என் அலுவலகத்தில் வேலை செய்த தோழி ஒருவருடன் மேல்மருவத்துருக்கு சென்றேன். அப்போது பங்காரு அடிகளார் வேப்பிலையை கிள்ளி போட்டார், அப்போது தாமரை பூவாக மாறியது. அதை என்னிடம் காண்பித்து இது என்ன என்று கேட்டார். அன்று உன் தோழி பங்காரு அடிகளார் பூசணிக்காயை வரவழைத்து தருவாரா என்று கேட்டாள் அல்லவா..? எதற்கு உன் தோழிக்கு பூசணிக்காய்.. அவளுக்காக தேவலோக தெய்வீக பணிகளெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறது என கூறினார்
பங்காரு அடிகளார் குறித்து ஜெயலலிதா பேசிய நிகழ்வு பங்காரு அடிகளாருக்கு தெரியாது. ஆனால் ஜெயலலிதா சொன்னதை அப்படியே அவர் தன்னிடம் தெரிந்தார். இந்த சம்பவத்தை ஜெயலலிதாவிடம் தெரியப்படுத்தினேன், உடனே அவர் வியப்படைந்து, நாம் போவோமோ என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் பின்னர் அங்கு வர மறுத்துவிட்டதாக கூறினார்.