fbpx

ஜெயலலிதா மரண விவகாரம்..! நாளை காலை 10.30 மணிக்கு இறுதி அறிக்கை..! பரபரப்பு தகவல்..!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 157 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

ஜெயலலிதா மரண விவகாரம்..! நாளை காலை 10.30 மணிக்கு இறுதி அறிக்கை..! பரபரப்பு தகவல்..!

அந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. இந்நிலையில், சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது.

Chella

Next Post

திட்டம் போட்டு வாலிபரிடம் இனிக்க பேசி.. விடுதிக்கு வரவழைத்த பெண்.. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Fri Aug 26 , 2022
கேரள மாநிலம், கோட்டயம் வைக்கத்தை உள்ள வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த வாலிபரை கொல்லத்தை சேர்ந்த ஹசீனா (28) என்ற பெண் தொடர்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். தொடர்ந்து அந்த வாலிபரிடம் மகிழ்ச்சியாக பேசி தனக்கு கொஞ்சம் முன்பணம் வேண்டும் என கூறி, அதை நேரில் தருமாறு கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அந்த வாலிபர் பணத்தை கொடுப்பதற்காக ஹசீனா கூறியபடி கொச்சியில் […]

You May Like