JEE Main 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை இன்று இரவு 10.50 மணிவரை நீட்டித்து தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதற்காக விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதளம் மூலம் இன்று (மார்ச் 4) வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதன்படி, விண்ணப்பத்தை இன்று இரவு 10.50 மணி வரை பூர்த்தி செய்வதற்கான நேரமும், கட்டணம் செலுத்துவதற்கு இரவு 11.50 மணி வரையும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை திருத்தம் செய்ய மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கால நீட்டிப்பு ஒரு முறை வாய்ப்பு எனவும், எனவே ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்தவர்கள், இந்த வாய்ப்பை கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தேசிய தேர்வு முககை (NTA) தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 1 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. அமர்வு 1 முடிவுகளுடன், அகில இந்திய தரவரிசையை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிக்கவில்லை. அமர்வு 2 முடிந்த பிறகு, அகில இந்திய தரவரிசை (AIR) பட்டியல் தயாரிக்கும் போது, அமர்வு 1 மற்றும் அமர்வு 2 சிறந்த மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது…! மாணவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்…!