சென்னை மாநகர பகுதியில் உள்ள ஆதம்பாக்கம் மாவட்டத்தில் முதியோர்களின் வீடுகளுக்குச் சென்று முகவரி கேட்பதாகக் கூறி அவர்களது தங்கச் சங்கிலியை சிலர் திருடிச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரூபன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேகித்து குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் , வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை குறிவைத்து இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.
முகவரி கேட்பது போல் நடித்து, குலாப் பாஷா மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குலாப் பாஷாவை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், தங்க நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.