fbpx

குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும் ஜியோ 4 ஜி லேப்டாப் .. எவ்வளவு விலை என்று தெரியுமா?

மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. இந்த மாதம் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு மடிக்கணினிகள் விற்பனை செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஜியோ 5 ஜி போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. ஜியோ புக் உள்நாட்டிலேயே ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்போகின்றது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.சி. தரவுகள் படி இந்தியாவில் ஒட்டு மொத்த கணினி ஏற்றுமதி கடந்த ஆண்டு 14.8 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

கரீனா கபூர் மீது கை வைக்க முயன்ற ரசிகர்… ஷாக்கான கரீனா …

Mon Oct 3 , 2022
மும்பை விமான நிலையத்திற்கு வந்த கரீனா கபூர் மீது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கை வைக்க வந்ததால் கரீனா ஷாக்கானார். வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு பாலிவுட் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு ரசிகர் அவர் தோளில் கை வைத்து செல்பி எடுக்க நினைத்திருந்ததாக தெரிகின்றது. இதற்காக நெருங்கி வந்து தோளில் […]

You May Like