fbpx

ஜியோவின் 5ஜி சேவை தீபாவளிக்குள் அறிமுகம்.. இந்த 4 நகரங்களில் மட்டும் தான்..

இந்தியாவில் தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் (AGM) 2022 நிகழ்வு இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ 5G சேவைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. மேலும் “ஜியோ டிஜிட்டல் இணைப்பில், குறிப்பாக நிலையான பிராட்பேண்டில் உருவாக்கும் அடுத்த அறிவிப்பை அறிவிக்க விரும்புகிறேன். அதுதான் ஜியோ 5ஜி.

அடுத்த இரண்டு மாதங்களில் அதாவது தீபாவளிக்குள் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.. -டெல்லி மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கும்.5ஜி மூலம், 100 மில்லியன் வீடுகளை டிஜிட்டல் அனுபவங்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் தீர்வுகளுடன் இணைப்போம்..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர் “ இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்படுவதால், தற்போது 800 மில்லியனாக உள்ள இணைய வசதி உடன் கூடிய இணைக்கப்பட்ட சாதனங்கள் ஒரு வருடத்தில் 1.5 பில்லியனாக இரட்டிப்பாகும்… மலிவு விலையில் 5ஜி போனை இந்தியாவிற்கு கொண்டு வர கூகுளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.. அடுத்த ஆண்டு ஜியோ5ஜி போன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜியோ 5G சேவைகள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் “அனைத்து நகரங்கள், தாலுக்காக்களில் டிசம்பர் 2023க்குள் சென்றடையும்.. இந்தியாவின் ஒவ்வொரு நகரதிற்கும் 5ஜி இணைப்பை வழங்குவோம்.. ஜியோ 5ஜி உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்க்காக இருக்கும். பான்-இந்தியா 5ஜி நெட்வொர்க்கிற்காக, ஜியோ ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

அஜித்தின் ’வலிமை’யை மிஞ்சிய தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’..! வசூல் எவ்வளவு தெரியுமா?

Mon Aug 29 , 2022
வெளிநாடுகளில் அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் அதிகளவிலான வசூலை பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 2022ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் தனுஷ் – […]
அஜித்தின் ’வலிமை’யை மிஞ்சிய தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’..! வசூல் எவ்வளவு தெரியுமா?

You May Like