fbpx

”ஜேஎன் 1” கொரோனா பாதிப்பு..!! கட்டாயம் ஒரு வாரத்திற்கு இதை செய்ய வேண்டும்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அப்போதிலிருந்து இப்போது வரை 70 லட்சம் மக்களை இந்த வைரஸ் கொன்று குவித்துள்ளது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பெரும்பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

‘ஜேஎன் 1’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்டநிலையில், சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. இந்தியாவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜேஎன் 1 கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ஒரு வாரம் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவும் இதே கருத்தை தான் தெரிவித்திருக்கிறார். புத்தாண்டு, பொங்கல் நெருங்கும் நிலையில், தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Chella

Next Post

மக்களே அலர்ட்..!! தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Thu Dec 28 , 2023
மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஜேஎன்1 […]

You May Like