இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்
துறையின் பெயர் – கிராமின் டக் சேவக்
தேர்வின் பெயர் – IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024
காலிப்பணியிடங்கள் – 344 (தமிழ்நாட்டில் 13 காலியிடங்கள்)
கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
01.09.2024 இன் படி அஞ்சல் துறையுடன் கிராமின் தாக் சேவக் ஆக குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
IPPB Executive Recruitment 2024-க்கான நிர்வாகப் பதவிகளுக்கான ஆன்லைன் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. புதிய பயனர்களாக இருந்தால் முதலில் போர்ட்டலில் பதிவு செய்து, தங்கள் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை நிரப்பலாம்.
விண்ணப்பக் கட்டணம் – ரூ.750 செலுத்த வேண்டும்.
சம்பளம் – மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – அக்டோபர் 31
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ippbonline.in./ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read More : மக்கள் தொகை கணக்கெடுப்பு..!! வீட்டிற்கு வரும் அதிகாரிகள்..!! உங்களிடம் கேட்கப்படும் கேள்விகள் இதுதான்..!!