fbpx

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை.. ரூ.69,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரம்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

அறிவியல் உதவியாளர் B – 45 காலிப்பணியிடங்கள்

அறிவியல் உதவியாளர் (ST/SA) – 82

டெக்னீஷியன் (ST/Technician) 226

உதவியாளர் (Grade – 1 (HR) – 22

உதவியாளர் Grade – 1 (F&A) – 4

உதவியாளர் Grade – 1 (C&MM) – 10

நர்ஸ்-A – 1

டெக்னீஷியன் (X-Ray) – 1

மொத்தம் – 391

வயது வரம்பு :

* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். உதவியாளர் பிரிவில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.

* நர்ஸ் மற்றும் அறிவியல் உதவியாளர்-B பதவிகளுக்கு அதிகபடியாஅக் 30 வயது வரை இருக்கலாம். டிரைய்னி அறிவியல் உதவியாளர் பதவிக்கு 25 வயது வரை இருக்கலாம். டெக்னீஷியன் பிரிவிற்கு 24 வரையும், உதவியாளர் பிரிவு பதவிகளுக்கு 28 வரையும், X-Ray டெக்னீஷியன் பதவிக்கு 25 வரையும் இருக்கலாம்.

கல்வித்தகுதி : இப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் டிபள்மோ, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பள விவரம் :

* நர்ஸ் பதவிக்கு மாதம் ரூ.68,697 மாத சம்பளமாக வழங்கப்படும்.

* அறிவியல் உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.54,162 சம்பளமாக வழங்கப்படும்.

* உதவியாளர் மற்றும் டெக்னீஷியன் பதவிக்கு மாதம் ரூ.39,015 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.npcilcareers.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 முதல் ரூ.150 வரை பதவிக்கு ஏற்ப செலுத்த வேண்டும்.

Read more: விறுவிறுப்பாக நடைபெறும் ஜனநாயகன் ஷூட்டிங்.. 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜய் அப்டேட்..

English Summary

Job opportunities abound in the central government.. Salary up to Rs.69,000..!!

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? எப்போது கிடைக்கும்..? சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பு..!!

Fri Mar 21 , 2025
The applications of 57,327 people who have applied for new ration cards have been accepted and the printing of smart cards is underway.

You May Like