சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருகின்ற 08.03.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 08.03.2025 அன்று ஆத்தூர் தேவியாகுறிச்சி தாகூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
மேலும், இம்முகாமில் 7,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர். ஆசிரியர். தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில்நிறுவனங்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.