சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 40 பணியிடங்கள் காலியாக உள்ளது.
பணியிடங்கள் விவரம் :
ஆய்வக உதவியாளர் – 09
அலுவலக உதவியளர் – 08
டைப்பிஸ்ட் – 02
ரெக்கார்டு கிளர்க் – 03
தூய்மை பணியாளர் – 06
வாட்ஸ்மேன் – 02
வாட்டர்மேன் – 02
மார்க்கர் – 03
தோட்ட பராமரிப்பாளர் – 02
Scavenger – 02
ஸ்டோர் கீப்பர் – 01
கல்வித் தகுதி :
* டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்திருப்பது அவசியம்.
* ஆய்வக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
* இதர அனைத்து பணியிடங்களுக்கும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும், பிசி/எம்பிசி பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
“The Secretary & Correspondent, Loyola College, Chennai – 600 034” என்ற முகவரிக்கு விண்ணப்பத்த அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவை secretary@loyolacollege.edu என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.02.2025
கூடுதல் தகவல்களுக்கு https://www.loyolacollege.edu/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH