fbpx

பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

பிரபல ஐடி நிறுவனத்தில் காலியாகவுள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி, மாஸ்டர் டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் NetAPP. இந்த நிறுவனம் unified data storage, integrated data services மற்றும் cloud operations (CloudOps) solutions உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் பெங்களூருவில் இயங்கி வருகிறது. இங்கு காலியாகவுள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரிவில் டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் 0 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி, இப்போது தான் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு Python கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

சி++, REST API, cloud and Virutalization, ReactJS, உள்ளிட்டவை தெரிந்திருந்து வைத்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு போனஸாக இருக்கும். மேலும் VMWare, ESX, Linux KVM தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? என்பதும், தேர்வு செய்யப்படும் நபருக்கான மாத சம்பளம் பற்றிய விபரமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் சம்பளத்தை பொறுத்தவரை அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.

அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக NetAPP நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய https://careers.netapp.com/job/bengaluru/software-engineer/27600/64077230112?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Read More : பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு..!! கவலைய விடுங்க..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிறலாம்..!!

Chella

Next Post

பெண்களை ஏமாற்றி பிழைத்த விஜய் கட்சி நிர்வாகி..!! பணம் கேட்டு சென்றால் இப்படியா செய்வது..?

Tue May 7 , 2024
திருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் வீட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான முருகன் என்பவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாகவே அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டுக்கான தவணை காலம் முடிந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து […]

You May Like