புதுக்கோட்டை மாவட்டத்தில் நர்ஸிங் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கீழ் திருவரங்குளத்தில் செயல்பட்டு வரும் மண்டல பொது சுகாதார பயிற்சி நிலையில் தாய் சேய் நல அலுவலர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. B.Sc / M.Sc நர்ஸிங் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பங்களை உரிய கல்விச்சான்றுகளின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வுக்குழு மூலம் நேர்முகதேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணிக்கு ரூ.19,000 மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றுகளின் ஒளிநகலுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 20.08.2023 அன்றுமாலை 5.30 மணிக்குள் அனுப்பவேண்டும் .